எச்சரிக்கை சகோதரர்களே!
(தங்கள் சுவனப்பாதை எளிதாக்க முயளுங்கள்)
”என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள்.(புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி))
ஜும்-ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
ஜும்ஆ தினத்தன்று இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உம்முடன்இருப்பவரை வாய்பொத்தி இரு(ம்) என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை)வீணடித்து விட்டீர். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 419 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
ஜும்ஆ நாளன்று யார் குத்பாவை செவியுற்று வாய்பொத்தி இருந்தாரோ அவரதுசிறப்பு பற்றிய பாடம்
யார் குளித்துவிட்டு அதன்பிறகு ஜும்ஆ-விற்கு வந்து (அல்லாஹ்வினால்)அவருக்கு ஏற்படுத்தப்பட்டைதை தொழுதுவிட்டு அவர் குத்பா பிரசங்கத்தைமுடிக்கும்வரை வாய்பொத்தி இருந்து(விட்டு) அவரோடு தொழுதம் விட்டால்,அவருக்கும் அடுத்த ஜும்ஆ-விற்கும் இடையில் (அதற்கு) மேலும் அதிகமாகமூன்று நாட்களுக்கும் (அவறில் ஏற்படும் சிறிய பாவங்கள்) அவருக்குமன்னிக்கப்படுகிறது.
ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 420 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
இறைநம்பிக்கையை சுவைத்தவர் நம்மில் யார்?
‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடையதூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர்மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதைவெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.Volume:1 Book:2 : Verse 16
நன்றி:http://islamicparadise.wordpress.com/:
No comments:
Post a Comment