Sunday, September 20, 2009


வசந்தகாலங்களின் வாயிற்படிகள் திறக்கவேண்டும்

வருங்கால சந்ததிகள் வறுமை இல்லாத காலங்களில் சஞ்சரிக்க வேண்டும்

வஞ்சம் இல்லாத உள்ளம் பெற்று

வானவில்லின் வண்ணம் பெற்று

வண்ணமயமான எதிர்காலத்திலே பிரவேசிக்க வேண்டும்

எண்ணங்களும் எழுத்துக்களும்

இன்ன பிற செயல்களும்

எளிச்சிகளையும் மகிழ்ச்சிகளையும்

உருவாக்க வேண்டும்

வாழ்கின்ற காலம்வரை

வர்ண பேதம் இல்லாத வாழ்கையை நேசிப்போம்

அதற்காகவே சுவாசிப்போம்

இறைவனின் சாந்தியும் சமாதானமும்

அனைவர்மீதும் உண்டாக

இணைந்தே பிரார்த்திப்போம்

வஸ்ஸலாம்

இப்படிக்கு

மண்ணின் மைந்தன் எ.முகம்மது சுல்தான் (நச்சியாற்கோவில்)
அஸ்ஸலாமு அழைக்கும் எல்லாபுகழும் இறைவனுக்கே இந்த இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கின்றது இந்த இணையதளத்தை துவக்கியதின் நோக்கம் நான் ஊடகங்களில் பார்த்த படித்த நல்லவிசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் பத்திரிக்கைகள் ஆனாலும் தொலைக்காட்சிகள் ஆனாலும் சரி மனித சமூகத்தை முன்னேற்ற கூடிய மனித சமூகத்தை பன்படுத்தகூடிய விசயங்களை தருவதை விட மனித சமூகத்தை பால்படுத்தகூடிய அனாச்சரங்களையும் ஆபாசங்களையும் வன்முறைகளையுமே முன்னிலைப்படுத்துகின்றன காரணம் இவைகள் அனைத்தும் இவர்களுக்கு இலாபம் தரக்கூடிய விசயங்களாக இவர்கள் கருதுகின்றனர் இதனால் விளையும் நன்மை தீமைகளை ஆராயாமல் இலாப நட்டங்களை மாத்திரம் பார்க்கின்றனர் இந்த தீமைகளில் இருந்து மனித சமூகம் தன்னை தற்காத்து கொள்ளவேண்டும் இதற்க்கு நன்மை தீமைகளை பிரித்தறிந்து நன்மைகளை மட்டும் தேர்வு செய்ய கூடிய நன்மக்களாக இந்த மனித சமூகம் மாறவேண்டும் இது சாத்தியமாக வேண்டும் என்றால் நம்மை யாரும் பார்க்கவில்லை என்றபோதும் இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கின்றான் என்கின்ற இறை அச்சம் நம்மில் மிகுதியாக வேண்டும் இப்படி பட்ட இறையச்சத்தை அதிகபடுத்தகூடிய விசயங்களை செய்திகளை இந்த இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது தலையாய விருப்பம் இஸ்லாம் இந்த மனித சமூகம் முழுவதற்கும் சொந்தமானது திருக்குர் ஆண் முழு மனித சமூகத்திற்காக இறக்கியருளப்பட்டது என்கின்ற குரானின் வாசகங்களை அதன் வார்த்தைகளிலேயே பதிவுசெய்ய விரும்புகின்றேன் அதற்கு ஆதாரமான நபிமொழிதொகுப்புகளை இன்ஷா அல்லா பதிவுசெய்வேன் இது தொடர்பான உங்களின் மேலான விமர்சனங்களை mvazeem786@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் இப்படிக்கு நச்சியார் கோயில் சுல்தான்
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்