Tuesday, March 16, 2010

பரிசுத்தமான எண்ணம்

இஃக்வாஸ் எந்தச் செயலை செய்வதற்காக இருப்பினும் அதற்கென்று ஒரு சில நிபந்தனைகள் உண்டு.

அந்நிபந்தனைகள் முழுமை செய்யப்பட்டால்தான் அச்செயல்கள் நிறைவடையும். நாம் இறைவனை வழிபடுகின்றோம்.

நம்முடைய வழிபாடுகள்இ இபாதத்துகள் இறைவனால் ஏற்கப்படவேண்டுமென்றால் அவற்றில் இஃக்ளாஸ் இருக்க வேண்டும்.

இஃக்ளாஸ் என்றால் என்ன?

இஃக்ளாஸ் என்றால் 'கலப்பற்ற பொருள். நூற்றுக்கு நூறு தூய்மையான பரிசுத்தமான பொருளின் தன்மையைக் குறிக்கவே இஃக்ளாஸ் என்ற சொல் பயன்படுகின்றது.
கால்நடைகளிலிருந்து தூய்மையான பாலை அல்லாஹ் நமக்கு வழங்குகிறான். அப்பாலை குறிப்பிட ஃகாலிஸா என்ற பதத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். (16˜66)

மலக்குடலுக்கும் இரத்தநாளங்களுக்கும் இடையிலிருந்து 'தூய்மையான பால் அதில் மலத்தின் நாற்றமும் இல்லை; இரத்தநிறமும் இல்லை; .
எனவே முழுமையான நிறைவுப் பண்புகளைக் கொண்ட கலப்பற்ற ஒன்றைக் குறிக்க 'இஃக்ளாஸ் என்ற சொல் பயன்படுகின்றது.

ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்தார்.

வந்தவர் '(மறுமையில்) கூலியையும் (இவ்வுலகில்) புகழையும் எதிர் பார்த்துப் போரிடும் மனிதனைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?' என்று கேட்டார்.

'அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது' - என்றார்கள் அண்ணலார்கள்.

மீண்டும் மீண்டும் மூன்று தடவை அதையே அவர் கேட்டார்.

ஒவ்வொரு முறையும் அதே பதிலையே அண்ணலார் அளித்தார்கள்.

பிறகு விளக்கினார்கள். 'தனக்காக மட்டுமே செய்யப்படும் அமலையும் தன்னுடைய திருமுகத்தை மனதிற்கொண்டு செய்யப்பட்ட செயலையும் மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான்!'

அறிவிப்பவர்- அபுஉமாபா (ரலி) பதிவு- அபுதாவூது நஸாயி.

தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாக அவனுக்கு மட்டுமே இஃக்ளாஸான எண்ணத்துடன் அவனை வழிபட ஆணையிடும் இறைவசனங்கள் வான்மறை குர்ஆனில் பலப்பல உள்ளன.

'நீர் அல்லாஹ்வையே வழிபடும்! தீனை கீழ்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்' (39:2)

'தீனை - கீழ்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும் படி எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது'. (39:11)

'நான் என்னுடைய தீனை - கீழ்படிதலை அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்‹ம் அவனையே வணங்குவேன் (39:14)

நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே எங்கள் அடிபணிதலை முற்றிலும் உரித்தானதாக்கி விட்டோம்'. (2˜139)


முஆதிப்னு ஜமல் யமன் தேசத்து ஆளுநராகப் பொறுப்பேற்கப் புறப்பட்ட போது அண்ணலாரிடம் வந்து உபதேசிக்குமாறு வேண்டி நின்றார்.

அண்ணலார் கூறினார்கள். 'உன்னைுடைய தீனை இஃக்ளாஸாக ஆக்கிக் கொள். நீ செய்யும் குறைவான அமல்களே உனக்குப் போதுமானதாகும்! -

தர்கீப் வத்தர்ஹீப் அல்ஹாகிம்-

நம்முடைய விரோதியான ஷைத்தானிடமிருந்து நாம் பாதுகாப்பு பெற வேண்டுமென்றால் நாம் இஃக்ளாஸோடு இருக்க வேண்டும்

முஃமின்களில்களை ஷைத்தானால் அணுகவோ சீர்கெடுக்கவோ வழிகெடுக்கவோ இயலாது.

வான்மறையில் இதை அவனே ஒப்புக் கெள்ளும் வசனம் பதிந்துள்ளது.

'அதற்கு அவன் கூறினான். 'என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செ்யவேன்.

ஆனால் 'உன்னுடைய தூய இறைநம்பிக்கை கொண்ட அடியார்களைத் தவிர!' (15:39 40).

ஷைத்தானின் தோழர்களான தாகூத்திய சக்திகளும் காஃபிர்களும் இஃக்ளாஸோடு இறைவனை மடுமே மனதில் நிறுத்தி முனைப்புடன் நாம் செயல்படுவதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
வகைவகையான துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆக முஃக்ளிஸ்களாக வாழ நினைப்பவர்கள் தாகூத்திய சக்திகளை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அதற்காக தயாராக்கிக் கொள்ளவேண்டும்.

'உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்!

உங்களுடைய இந்த செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதால் இருந்தாலும் சரியே!'

No comments:

Post a Comment

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்