Monday, October 14, 2013

பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா?:


நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிருந்து) முதல் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் சாப்பிட்டு விட்டுத் தான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்கலும் நாம் காணமுடிகின்றது.
ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதை புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகல் எனது ஆடே முதன் முதல் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்கடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையத்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ (ரலி) நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுதுவிட்டு வந்து ஹஜ் பெருநாள் சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுது விட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கின்றார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.



பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
நூல்: புகாரி 989
இந்த ஹதீஸின் படி பெருநாள் தொழுகையின் முன்போ, பின்போ எந்தத் தொழுகையும் கிடையாது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்