Friday, December 25, 2009

இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 18
பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும் அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.
இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.
உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது. முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622-ம் ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630-ல் மக்காவை வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார்.(கி.பி.632) (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம் நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம். அரேபியாவில் அல்ல; உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.
ஆக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார். மதப்பிரசாரம் மட்டுமே அவரது பணியாக இருக்கவில்லை. மாறாக, அவர் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.
ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத் தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களைச் சேர்ந்தது. கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்), யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.அந்த மூன்று யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின் படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.) ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள் வென்றார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது. ஆனாலும் ஜெயித்தார்கள். இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹத் யுத்தம். (அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஓர் இறைத்தூதரே ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி, கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே அடைந்தார்கள்.மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள் காரணமல்ல. மக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின் என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள். குறிப்பாக மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.
பத்ரு போரில் குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது. தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள். அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால் என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம் இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.
ஒரு முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.இந்த மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட யுத்தங்கள். இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக் யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம், ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது உண்மையே. ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில் முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர் இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இருந்திருக்கிறது. அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள், போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். (முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களின் காலத்துக்குப்பின் நடந்த யுத்தங்கள் பிறகு வரும்.) இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில் நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஓர் உபாயம் செய்தார். மக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம் உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே எதிர்கொள்வார்கள்.
அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்), மதினாவில் வசிக்கும் யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.
"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது."
"முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்), ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)-க்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும் பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ, சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப் பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.
இந்த அறிக்கைக்குப் பிறகு, முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல் உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று தோன்றுகிறது. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.
ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில் முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில் முகம்மதுநபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம் அப்படியே கடைப்பிடித்தார்கள். யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின்மூலம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார். தங்களது சுதந்திரம் என்பது, தனியான யூததேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.
மாறாக, முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில் சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.
எப்போதும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 ஜனவரி, 2005

நன்றி: http://www.nidur.info

Thursday, December 17, 2009

assalaamu alaikkum
pj-avargalin bathilgal

கேள்வி:அழகர் கடவுள் சர்வசக்தி படைத்தவன் என அய்யா அவர்கள் சொன்னார்கள். ஆயினும் இந்நாட்டில் பிரச்னைகள் உருவாவதே கடவுளின் பெயரால்தான். வரலாற்று சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜிதை இடித்தது மாபெரும் குற்றம். இந்துமதக் கடவுளின் பெயரைச் சொல்லி இதைச் செய்தார்கள்.அதே போல் பாதிரியாரைக் கொன்றார்கள். கன்னியாஸ்திரிகளை கற்பழித்தார்கள். கடவுளினால் உலகம் பூராவும் பிரச்னைதான். மதப்பிரச்னை, கடவுள் பிரச்சினை அத்துடன் தீண்டாமை, ஜாதிக் கொடுமை, இந்து மதத்தில் சூத்திரப்பட்டம், தேவடியாள் மகன் என்றெல்லாம் கூறி எழுதி வைத்திருக்கிறார்கள். இது ஜயாயிரம் வருடங்களாக இருக்கிறது. இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டு எப்படி சகிப்புத் தன்மையோடு சும்மா இருக்கிறார். இதற்கெல்லாம் என்ன தீர்வு? நாம் கடவுளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயத்தை அமைப்பை ஏற்படுத்தி கடவுள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாமா?

பதில்: சண்டைகள் கடவுளின் பெயரால்தான் நடைபெறுகிறது என சகோதரர் அழகர் கூறியது உண்மைதான். இருந்தும் கடவுளின் பெயரால் மட்டும் நடைபெறவில்லை உதாரணமாக, மொழியின் பெயரால் சண்டை நடக்கிறது. இதற்கு கடவுள் கொள்கை காரணமல்ல. கடவுள் கொள்கைஇல்லாத கம்யூனிஸ்ட்களுக்கு மத்தியிலும் இடதுசாரி கம்யூனிஸ்ட், வலதுசாரி கம்யூனிஸ்ட் என சண்டை நடக்கிறது. எனவே சண்டைக்குக் காரணம் மனிதனின் வக்கிர புத்தியே தவிர கடவுள் கொள்கை அல்ல. சண்டை, சச்சரவுகளுக்கு மனிதன் கடவுள் கொள்கையைக் காரணம் காட்டுகிறான். மொழியைக் காரணம் காட்டுகிறான். இவனிடம் குடிபுகுந்துள்ள வக்கிர புத்தியைக் கூறுவதில்லை.எனவே சண்டை போடுகின்றவன் இருக்கின்ற வரை எதை வைத்தாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான். இதை ஒழிக்க முடியாது. சகோதரரின் கேள்வியின் முக்கிய பகுதி என்னவென்றால், இவ்வளவும் நடக்கும் போது கடவுள் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்பதுதான்.பள்ளிவாசலை இடிக்கிறார்கள், பாதிரியாரை எரிக்கிறார்கள். இப்படி எவ்வளவோ நடந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் அக் கடவுளை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் கொள்கை இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி நாம் எல்லாவற்றையும் இல்லாதொழித்து விடலாமே! என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இரு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று கடவுள் கொள்கையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கியபின் எப்பிரச்சினையும் இல்லாத சமுதாயமாக வாழலாம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. பக்குவபட்டு சரியாக நடக்க வேண்டுமென்ற உணர்வும் எல்லா மக்களுக்கும் வந்துவிடாது. கண்டிப்பாக அது முடியாத காரியமும் கூட. ஏனெனில் கடவுள் இல்லை என ஓரம் கட்டிய பின் மனிதன் எவருக்குமே பயப்படமாட்டான். அவனவன் தத்தமது அறிவைப் பயன்படுத்தி ஒருவனுக் கொருவன் துரோகம் செய்ய முற்படுவான். அபகரிப்பான். ஊழல் புரிவான். உயர் மட்டம் இலஞ்சம் வாங்கும்.பாதகங்கள் அனைத்தும் தலை விரித்தாடும். மற்றொன்று, அநியாயங்களை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரே! எனக் கேட்டது நல்லதொரு கேள்வி. இந்த அண்டத்தைப் படைத்தது பற்றி கூறும் இறைவன் இதை ஒரு சோதனைக் கூடமாக படைத்திருப்பதாகக் கூறுகிறான். இந்த உலகு, அதன் இன்பங்கள் போன்றவற்றிற்கு ஒரு கொசுவின் இறக்கையளவுகூட இறைவனிடம் மதிப்பு இல்லையென இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவேதான் இறைவன் இவ்வுலகில் மனிதன் புரிகின்ற அநியாயங்களை, அட்இழியங்களைக் கவனித்து உடனடியாகத் தண்டிக்காது, அவனுக்கு அவகாசம் வழங்கி அக்காலப் பகுதிக்குள் அவன் திருந்தி வாழ்கிறானா? எனப் பார்க்கிறான். தண்டைனைக் குரிய இடம் மறு உலகுதான். இங்கு வந்த்திருக்கும் மக்களை கவனியுங்கள். இவர்களில் சிலர் இதற்கு முன் குற்றம் புரிந்தவர்களே! ஆனால் காலப்போக்கில்அவைகளைத் தவறெனப் புரிந்து கொண்டு திருந்தி வாழ ஆரம்பித்திருக்கின்றனர். எனவே இப்படி ஒரு அவகாசத்தை இவர்களுக்குத் கொடுக்காமல் தவறு செய்த உடனேயே, இவர்களை இறைவன் அந்த இடத்திலேயே தண்டனையாக அழித்திருந்தால் இவர்கள் இந் நிலைக்கு ஆளாகி இருப்பார்களா? எனவே குற்றத்திற்கு உடனே இறை தண்டனை என்பது பொருத்தமற்ற செயலாகவே நமது சிந்தனைக்கு படுகிறது. மனிதன் இயல்பில் தவறு புரிபவன்தான். எனினும் அவன் தனது தவறை நினைத்து திருந்தி வாழ முற்பட வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கான சிறிய சான்றொன்றையும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அதாவது, முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற கொடுமைகள், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்ற என்னை மேலப்பாலையத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு சகோதரர் கொலை செய்யும் நோக்கில் எனது கழுத்தில் வெட்டியபோது அக்கத்தி இறையருளால் கையில் பட்டு சிறு காயங்களோடு நான் தப்பினேன். அல்ஹம்துலில்லாஹ். என்னை தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று வெட்ட வந்தவர் இப்போது எனது பாதுகாப்புக்கு எனக்கு துணையாக வந்திருக்கிறார். அன்றே அவரைப் பிடித்து காலி செய்திருந்தால் நிலமை என்னவாயிருக்கும்? எனவே மன்னித்து அவகாசம் கொடுப்பவராக நாமே இருக்கும்போது மிக்க கருணையுள்ள இறைவன் எப்படி உடனே தண்டிப்பான்? இங்கு இருக்கக்கூடிய யாரவது நான் எந்தத் தவறும் இதுவரை செய்யவில்லை என துணிந்து கூறுங்கள் பார்க்கலாம். முடியாது. நிச்சயமாக முடியாது. இறைவன் உடனே தண்டிக்க வேண்டுமென விரும்பினால் நம் அனைவரையும் என்றோஅழித்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் இப்புவியில் என்றோ மனித இனம் அழிந்து இருக்கும். ஆகவே புரிகின்ற தவறுகளுக்கு மறுமை நாளில் தண்டனை உண்டு என்ற நினைப்பு மனிதனுக்கு வந்து விடுமானால், ஒழுக்கமுள்ள வாழ்க்கையாக அவனது வாழ்வு மாறிவிடும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
நன்றி : http://www.readislam.net/

Wednesday, December 2, 2009

"பேராசை"

இறைத்தூதர் அவர்களிடம் நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே! இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும். பேராசையுடன் இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான் (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற மாட்டேன்" என்று கூறினேன். அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) , நூல்:புகாரி
மனிதனுக்கு இரு வெட்ட வெளிகள் பொருள் இருந்த போதிலும் அவன் மூன்றாவதைத் தேடத்துவங்கி விடுவான். மனிதனின் வயிற்றில் மண்ணைத்தவிர (வேறு ஒன்றும்) நிரம்பாது. எவர் (பேராசையை விட்டொழித்து) பாவமன்னிப்பு கோருகிறாரோ அவருடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இவ்வாறு நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
உமர்(ரலி) அறிவித்தார். நபி அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)" என்றார்கள். நூல்: புகாரி
பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி) நூல்:திர்மிதீ
நபி் அவர்கள் கூறினார்கள்' ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.
'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : http://www.readislam.net/

Friday, November 20, 2009

குர்ஆனின் நற்போதனைகள்

நாவைப் பேணுக!


உண்மை பேசுக!அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு

அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா

நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள்

அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.

5:119

நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;

(எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.


அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,

அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை

செய்யுங்கள்; மனிதர்களிடம்


அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து

விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து

வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக்

கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர்

நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.

6:152

அன்பாகப் பேசுக!அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,

அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில்

போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும்,

வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன்

உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக,

வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை

நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம்

செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக

வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர்

அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள்

வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!

உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின்

வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும்

ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை

பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக

இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி :
http://www.readislam.net/

Saturday, November 14, 2009

இஸ்லாம் சமய(மத)மல்ல! ANK
மற்ற சமயங்களைப் போல் மதங்களைப்போல் "இஸ்லாம்" ஒருசமய(மத)மாகவே மாற்றார்களால் கணிக்கப் பட்டுள்ளது. இது வி„யத்தில் அவர்களைக் குறைகூறி விமர்சிக்கும் இடம்பாடு மிகக்குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், இன்றைய முஸ்லிம்களின் புரோகித மோகம், உண்மை மார்க்கத்தை சமயமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
மற்ற சமயங்களில் நியதியாக்கப்பட்டுள்ள மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் பெரும்பாலானவைகள் அப்படியே அல்லது சிற்சில மாற்றங்களுடன் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையை அனுசரித்து நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்களின் அங்கீகாரத்துடன், இவைகள் அவர்களாலேயே நடத்தி வைக்கப்படுகின்றன. அதனால், இதுவும் இஸ்லாத்திற் குட்பட்டதே என்பது இன்றைய முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!இஸ்லாத்திற்கு இன்றைய முஸ்லிம்கள் மாற்றாருடன் போட்டிக் போட்டுக்கொண்டு பாரம்பரிய சொந்தம் கொண்டாடுவதால் மற்ற சமயத்தவர்கள் மூடச்சடங்கு சம்பிரதாயங்களை நியாப்படுத்த செய்யும் விதண்டா வாதங்களே இங்கும் நியாயங்களாகின்றன.இந்நிலையில்,இன்றைய முஸ்லிம்கள் நன்றாகச் சிந்திப்போர் கூட இஸ்லாத்தைப் பாரம்பரிய அடிப்படியில் அணுகி, இஸ்லாமும், மற்றசமயங்களைப் போல் ஒருசமயம் என்ற மாயையில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் போன்றவர்கள் மூலம்தான் மாற்றார்கள் இஸ்லாத்தை அறியும் சூல்நிலை பரவலாகக் காணப்படுகின்றது.ஏற்கனவே மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய முஸ்லிம்கள் (தவறான) நடை முறைகளைக் கண்டு இஸ்லாத்தை மாற்றார்கள் தவறாகக் கணித்து வைத்துள்ளனர். சில போற்றத்தக்க நடைமுறைகள் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டாலும், அவைகள் மாற்றார்களிடம் இஸ்லாத்தை நிƒத் தோற்றத்தில் அறிமுகப்படுத்த ஏற்றதாய் இல்லை.அதனால் மற்ற சமயத்தவர்கள் போல் இன்றைய முஸ்லிம்களும் ஒரு சமயத்தவர்களே!சடங்கு சம்பிரதாயங்களைத் தோற்றுவித்தவர்கள் புரோகிதர்கள். இறைவன் கூறுகிறான்:மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்; அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி, அல்லா‹வுடைய வழியிலிருந்து, அறிவின்றி (ƒனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.(அல்குர்ஆன் 31:6)மற்ற சமயங்களைப் போல் இஸ்லாமும் ஒரு சமயமே மதமே என்ற (தவறான) தோற்றம் எப்படியோ ஏற்ப்பட்டுவிட்டது. இது போலித் தோற்றம், உண்மையல்ல. இதற்கு இன்றைய முஸ்லிம்களும், அவர்களின் முன்னோர்களும், மார்க்கத்தைப் புரோகிதமாக்கிய முல்லா வர்க்கமும் முழுப் பொறுப்பாளர்களாகிறார்கள்.
இஸ்லாம் பொறுப்பு அல்ல!இஸ்லாம் ஒரு மதமல்ல!இஸ்லாம் ஒரு சமயம் அல்ல!இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல!இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம்.அல்லா‹ முஸ்லிம்கள் அனைவரையும் உண்மையான மார்க்கத்தை விளங்க வைப்பானாக.
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : http://www.readislam.net/
மறுமை வாழ்வு ஒரு தெளிவு

ஆராய்ச்சி பகுத்தாய்வின் அடிப்படையில் கிடைக்கப்படும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும் பகுத்தாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடு நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமான ஒன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு என்று நம்பிக்கை கொள்ளும்படி போதித்தார்கள்.
மறுமை வாழ்வின் மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழி வகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொருளற்றதாகி விடும் எனும் அளவுக்கு இறைத்தூதர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வைப்பற்றி அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இறை வெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து இறைத்தூதர்களும் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் இறப்பிற்குப்பின் உள்ள வாழ்வை மக்கள் மறந்ததுதான். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால் அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையில் ஏராளமான நல்லறத் தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக்கொள்கைகள், குலப் பழக்க வழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இவைகளிலிருந்து மாருபட்டதோடல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியாளர்களுக்கு அளித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது.
தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமை படுத்தியது எது? அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தை புலனறிவின் மூலமாக உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலன்களால் உணர முடியாத விஷயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.
இதனால்தான், இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைத்தூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு, மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலை வணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்க ரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது.
மனிதன் தர்க்கவாதியாகி விடுகிறான்:
36:77. மனிதனை ஒரு துளி இந்திாியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். 36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?"" என்று. 36:79. ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்"" என்று (நபியே!) நீர் கூறுவீராக! 36:80. ''பசமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். 36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
சரியான அடிப்படையை இறைமறுப்பாளர்கள் பெற்றிருக்கவில்லை.
45:24. அவர்கள்; ''நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; ''காலம்"" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை"" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. 45:25. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், ''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்"" என்பது தவிர வேறில்லை.
ஒரு நாள் வரும் அன்று உலகம் அனைத்தையும் இறைவன் அழித்துவிடுவான். இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்படுவர். அந்த நாள் நீண்ட நெடிய நாளின் துவக்கமாகும். அந்த வாழ்வுக்கு முடிவே இல்லை. ஆண் பெண் ஒவ்வொருவரும் செய்த நன்மை அல்லது தீமைகளுக்கேற்ப வெகுமதி அல்லது தண்டனை அளிக்கப்படுவர். மனிதனின் ஆத்மீகத் தேட்டங்களை நிறைவு செய்யும் வகையில் குர்ஆன் மறுமை வாழ்வின் அவசியத்தை விளக்குகிறது. இறப்பிற்குப்பின் வாழ்வு இல்லையென்றால் இறை நம்பிக்கை என்பது அர்த்தமற்றதாகிவிடும். அப்படியே ஒருவன் இறைவனை நம்பினாலும் நியாயமற்ற இறைவனைத்தான் நம்ப வேண்டியிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல.
நிச்சயமாக இறைவன் நீதமிக்கவன். இவ்வுலகில் வரை முறையின்றி கொடுமை புரிந்தவர்கள், அப்பாவி உயிர்களை பறித்தவர்கள், சமுதாயத்தில் லஞ்ச ஊழல்களைத் தோற்றுவித்தவர்கள், தமது மனோ இச்சைகேற்ப மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆகியோரை இறைவன் நிச்சயமாக தண்டிப்பான். மேலும் நியாயத் தீர்ப்பு நாள் வந்தே தீரும் என்று குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.
இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்:
34:3. எனினும் நிராகாிப்பவர்கள்; ''(நியாயத் தீர்ப்புக்குாிய) அவ்வேளை நமக்கு வராது"" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பொியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹ{ல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக. 34:4. ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன. 34:5. மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
இறைவனின் கருணையும் நீதியும் முழு அளவில் மறுமை நாளில் வெளிப்படும். இறைவனுக்காகவே இவ்வுலகில் தொல்லைகளை சகித்துக் கொண்டவர்களுக்கு குறைவிலா பேரின்பம் காத்திருக்கிறது. ஆனால் மறுமை நாளைப் புறக்கணித்து மதிக்காமல் வாழ்ந்தவர்கள் அந்நாளில் பேரிழிவுக்குள்ளாகி நிற்பார்கள். பாவிகளின் நிலைைைய குறித்து குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
மறுமை வாழ்க்கையை மறுப்பவர்கள் இறை நம்பிக்கையாளர்களையும் நேர்மையாளர்களையும் பரிகசிக்கின்றனர். அத்தகையோர் மரணத் தருவாயில் தங்கள் தவறை உணர்ந்து தங்களுக்கு இவ்வுலகில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அப்பொழுது புலம்புவார்கள்.
மரணத் தருவாயில் கோரிக்கை நிராகரிக்கப்படும்:
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!"" என்று கூறுவான். 23:100. ''நான் விட்டுவந்ததில் நல்ல காாியங்களைச் செய்வதற்காக"" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. 23:101. எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள். 23:102. எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 23:103. ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள். 23:104. (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை காிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
ஒரு தேசம் ஒட்டு மொத்தமாக மறுமை நம்பிக்கையைப் புறக்கணித்தால் அங்கு அனைத்து பாவங்களும் தீமைகளும் தலைவிரித்தாடும். இலஞ்ச ஊழல்கள் பெருகும். இறுதியில் அச்சமுதாயமே அழிவுக்குள்ளாகும்.
ஆத், ஸமூத், ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் அழிவு:
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர். 69:5. எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். 69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். 69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். 69:8. ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? 69:9. அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர். 69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான். 69:11. தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம். 69:12. அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்). 69:13. எனவே, ஸ_ாில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது: 69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் - 69:15. அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். 69:16. வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும். 69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். 69:18. (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. 69:19. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ''இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்"" எனக் கூறுவார். 69:20. ''நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."" 69:21. ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கயைில் - 69:22. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். 69:23. அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும். 69:24. ''சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்"" (என அவர்களுக்குக் கூறப்படும்). 69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! 69:26. ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- 69:27. ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? 69:28. ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! 69:29. ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!"" (என்று அரற்றுவான்). 69:30. ''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."" 69:31. ''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். 69:32. ''பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்"" (என்று உத்தரவிடப்படும்). 69:33. ''நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."" 69:34. ''அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் துண்டவில்லை."" 69:35. ''எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."" 69:36. ''சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."" 69:37. ''குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."" ஆகவே மறுமை நம்பிக்கை மனிதனுக்கு தீர்ப்பு நாளின் வெற்றியை மட்டும் அருளவில்லை. இவ்வுலகில் மனிதன் தனது பொருப்பை உணர்ந்து தனக்குரிய பணியினை செம்மையாக, முறையாக ஆக்ககரமாகச் செய்து உலக அமைதியும் இன்பமும் நிரம்பியதாக ஆக்கவும் இஸ்லாம் வழி காட்டுகிறது.

நன்றி : http://www.readislam.net/

Friday, November 13, 2009

கருத்து வேறு தகவல் வேறு

மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார்


நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடையோரைக் கூட தடுமாற வைக்கும் சாமார்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது! சற்று விரிவாகவே இதை அணுக வேண்டும்.
மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இப்புலன்களின் வழியாகவே பொருட்களை செய்திகளை, உணர அறிய முடிகின்றது, கண்ணால் ஒரு பொருளைக் காண்கிறோம். அதன் பெயரைச் செவி வழியாக அறிகிறோம். அதன் மனம் என்ன என்பதை உணர, மூக்குத்தான் உதவுகிறது. அதன் சுவையை நாவால் உணர்கின்றோம். அதன் மென்மையையும், வன்மையையும் கையால் தொட்டு உணர்கிறோம். இது புலன்களின் தனித்தனி பணி!
பிறவியிலேயே கண்பார்வையற்ற ஒருவன்; ஒரு பொருளின் நிறத்தையோ, உருவத்தையோ அறிய முடியாது. உதாரணமாக “கொக்கு வெண்மையான பறவை” என்று சொன்னால், அவனால் கொக்கையும், வெண்மையையும் உணர முடியாது. அது போல், காது கேட்கும் சக்தியற்ற ஒருவனிடம் ஒரு பொருளைக் காட்டி, அதை ஓசைப்படுத்தினால், அவன் அப்பொருளிலிருந்து வரும் ஓசை இன்னதென்று உணர மாட்டான். மூக்கு பழுதுபட்டு முகர்ந்தறியும் சக்தியற்ற ஒருவன், பொருளின் மனத்தை முகர முடியாது. அது போல் நாவின் நரம்புகள் பழுதுவிட்டு, நாவு மரத்துப் போன ஒருவன், இனிப்பு, கசப்பு போன்ற சுவைகளை உணர முடியாது.
ஆனால், ஒரு கருத்து சரியா? தவறா? என்பதைப் புலன்களால் மட்டும் முடிவெடுக்க இயலாது, ஐந்து புலன்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனா சக்தியினால் மட்டுமே அதை முடிவு செய்ய முடியும். “உலகம் தட்டையானது என்று ஒருவன் சொன்னதாக” நம்பகமான ஒரு நபர் மூலம் செய்தி வரும்பொது, ” அந்த ஒருவன் இப்படிச் சொல்லி இருப்பான்” என்ற செய்தியை - தகவலை நம்புகிறோம் அந்த ஒருவன் சொன்ன கருத்து சரியா என்பதை ஆராய்கிறோம், பின்னர் அந்தக் கருத்து தவறு என்ற முடிவுக்கு வருகிறோம். (இங்கே தகவல் நம்பப்படுகிறது! அது நமக்குச் சொல்கின்ற கருத்து மறுக்கப்படுகிறது)
சிலவற்றை அறிவதற்குரிய ஒரே வழி அந்தந்தப் புலன்கள் மட்டுமே! வேறு வழியே இல்லை! நாவால் ஓசையைக் கேட்கவோ கையால் மணம் முகரவோ, கண்ணால் சுவை அறியவோ இயலாது அல்லது சிந்தனை செய்தும் முடிவெடுக்க முடியாது.
நமது காலத்திற்கு முன் நடந்தவற்றை அறிவதற்குரிய ஒரே வழி செவிப் புலன் தான், உதாரணத்திற்கு மன்னர் “அவ்ரங்கசேப்” என்பவர் ஷாஜஹான் சிறையில் அடைத்தார்” இது ஒரு செய்தி. இதை நம்புவதா? மறுப்பதா? என்ற பிரச்சனை வரும்போது என்ன செய்வது?
ஷாஜஹான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தற்போது நாம் கண்ணால் காண இயலுமா? அல்லது மூக்கால் முகர்ந்து “ஆமாம்! ஷாஜஹான் சிறையில் இருந்தார்” என்று அறிய முடியுமா? கையால் தடவிப் பார்த்தோ, நாவால் சுவைத்தோ இந்தச் செய்தியை அறிய முடியாது. அல்லது சிந்தனையை எல்லாம் செலுத்தி, உள்ளுணர்வால் இதை ஊகித்தும் உணர முடியாது. செவி வழியாகக் கேட்டுக் கேட்டுத்தான் நாம் இந்த தகவலை அறிந்து வைத்திருக்கிறோம். நாம் நேரடியாகப் பார்க்க இயலாத, முகர இயலாத சுவைக்கவும் முடியாத ஒன்றை, சிந்தனைக்கும் எட்டாத ஒன்றை நாம் அறிவது எப்படி? தகவல்களாக செவி வழியாகத்தான் அறியமுடியும்.
ஆக சிந்தனையைச் செலுத்தி முடிவெடுக்க இயன்ற இடங்களில் அதைப் பயன்படுத்துகிறோம். (சிந்தனை சக்தி இருப்பதால்) கேட்டு நம்ப வேண்டிய கடந்த கால நிகழ்ச்சிகளை அந்த அடிப்படைகளை நம்புகிறோம். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதால் அந்த செவிவழிச் செய்தி பலரால் ஒரே விதமாகச் சொல்லப்படும் போது, “அது உண்மைதான்” என்ற நமது நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது. ஆனால் கருத்துக்களைப் பொறுத்தவரை உலகமெல்லாம் சேர்ந்து கொண்டு வேறுவிதமாகச் சொன்னாலும் நாம் ஏற்க மாட்டோம்.
“கொக்கு கறுப்பு” எனறு உலகமே சேர்ந்து சொன்னாலும் “அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்” என்ற தகவலை மட்டுமே நாம் நம்புவோம். அந்தத் தகவல் நமக்குக் கூறுகின்ற கருத்து சரியானதல்ல என்ற முடிவுக்கு நாம் வருவோம். இவ்வாறே குர்ஆன் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய ஒன்று. அதை நாம் செவிப்புலன் மூலமாகத் தவிர வேறு எந்த விதத்திலும் அறிய முடியாது. “இதுதான் குர்ஆன்” என்ற தகவலை முழு உலகமும் சேர்ந்து சொல்லும் போது அதில் நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது.
ஆனால் அவர்களது சொந்த அபிப்பிராயங்கள், கருத்துக்கள், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டால், நாம் ஆராய்கிறோம் மறுக்கிறோம். முரண்படாதிருந்தால் ஏற்கிறோம்.
உதாரணமாக “ஒன்று முதல் ஆயிரம் வரை எண்களைக் கூட்டும் முறை இது என்று என் ஆசிரியர் சொன்னார்” என ஒருவர் நம்மிடம் சொல்கிறார். அவரது நேர்மையில் நம்பிக்கை வைத்து, “அவர் ஆசிரியர் அவருக்குக் கணித முறையைச் சொல்லிக் கொடுத்திருப்பார்” என்று நம்புகிறோம். நம்மிடம் இவ்வாறு சொன்ன அதே நபர் “ஏழும் மூன்றும் பதினொன்று” என்று சொன்னால், (அவர் எவ்வளவு நாணயமானவராக இருந்தாலும்) நாம் ஏற்க மாட்டோம்” உங்கள் ஆசிரியரால் சொல்லித் தரப்பட்ட கணித முறைக்கே உங்கள் கணக்கு முரண்படுகிறதே” என்று அவரிடம் நாம் சொல்வோம். இங்கே அவரது நாணயத்தில் நம்பிக்கை வைத்து அவர் சொன்ன தகவலை நம்பிய நாம், அவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறோம். தகவல்களை நம்புவதற்கு நேர்மை, போதுமானதாக உள்ளது. கருத்துக்களை நம்புவதற்கு நேர்மை உதவுவதில்லை.
நமக்கு சிந்தனா சக்தி இருப்பதால், சிந்தித்து விளங்கக்கூடியவைகளை, சிந்தனையின் மூலமாக மட்டும் நம்புகிறோம். சிந்தனையால் விளங்க முடியாதவைகளை, அவற்றிற்குரிய புலன்களின் துணையால் அறிந்து நம்புகிறோம்.
தகவல்களை முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் நம்புவதால், கருத்துக்களிலும் அவ்வாறே நம்புவோம். இரண்டுக்கும், செவிப்புலன் மட்டுமே எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். கருத்துக்களில் சிந்தனையைச் செலுத்த மாட்டோம் என்று கூறுவோர், “ஏழும், மூன்றும் ஒன்பது” என்று எவராவது சொன்னால் அதையும் நம்பட்டும்! “பூமி தட்டையானது” என்று கடந்த காலத்தில் சொல்லப்பட்டதையும் நம்பட்டும்! “பூமி மாட்டுக் கொம்பின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்ற பாட்டிகளின் கதையையும் நம்பட்டும்! “சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுகின்றது” என்பதையும் நம்பட்டும்! ஏனெனில் அவர்களுக்குத்தான், செவியில் விழுந்து விட்டாலே பொதுமே! உடனே நம்பிவிட வேண்டுமே!
நம்மைப் பொருத்தவரை சிந்தனையைச் செலுத்தி விளங்க முடிகின்றவைகளை சிந்தனையால் விளங்குவோம். சிந்தனையால் முடிவெடுக்க இயலாத கடந்த கால நிகழ்ச்சிகளை செவிப்புலனின் துணை கொண்டு நம்புவோம்; அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால். எதை, எப்பொது பயன்படுத்த வேண்டுமோ அதை அப்போது பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் என் செவி மட்டுமே போதும் என்போர், இப்படிப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, சிந்தனையை மழுங்கச் செய்து கொள்ளட்டும்.
“இதுதான் குர்ஆன்” “இவை தான் ஹதீஸ்கள்” என்ற தகவல்கள் வெறும் செவிப்புலனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற ஒன்று மற்ற புலன்களால் இதை உணர முடியாது. சிந்தனையாலும் ஊகித்து உணர முடியாது.
எனவே முன்னோர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையை வைத்து, அவர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் ஒருமித்து அறிமுகப்படுத்தினார்களோ, அதை நாமும் நம்புகிறோம். வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சியும் செய்கிறோம்.
முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் காலம் காலமாகச் சொன்னார்களோ, அதில் முரண்பாடுகள் எதுவுமில்லாமலிருப்பதை நாம் காணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலத்திலும் கூட அதில் எந்த ஒரு தவறையும் காண முடியவில்லை என்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம். முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று சொன்னார்களோ, அதில் “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் இது போன்ற ஒன்றை இதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்றதையாவது இயற்றிக் காட்டுங்கள்!” என்று சவால் விடப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இன்று வரை எவராலும் அவ்வாறு செய்து காட்டி, குர்ஆனின் சவாலை ஏற்கமுடியவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இவற்றை எல்லாம் காரணமாக வைத்து இது தான் குர்ஆன்” நிச்சயமாக இது மனிதர்களால் இயற்றப்பட்டது அல்ல” என்ற திடமான முடிவு நமக்கு ஏற்பட்டு விடுகின்றது.
“குர்ஆன்” என்று சொல்லி வேறு எதையாவது நம்மிடம், நமது முன்னோர்கள் தந்திருந்தால் அதன் அமைப்பே, அதன் போலித்தன்மையை நமக்குத் தெளிவாக்கி இருக்கும்.
முன்னோர்கள் “இதுதான் குர்ஆன்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ அதை அவர்களின் கூற்றை நம்பி ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல், சிந்தித்துப் பார்க்க முடிகின்ற விதத்தில் சிந்தித்துப் பார்த்தும் உறுதி செய்து கொள்கிறோம்.
அது போல், முன்னோர்கள் “ஹதீஸ்கள்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ, அவற்றையும் செவி வழியாகவே நாம் கேள்வியுற்றோம். ஆனால் “ஹதீஸ்கள்” என்று சொல்லப்படும் அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நாம் ஏற்பதில்லை ஹதீஸ்கள் என்று அறிவிக்கக் கூடியவர்களில் ஒருவர், அல்லது பலர், நம்பகமானவர்களில்லை, பொய் சொல்லக் கூடியவர், நினைவாற்றல் இல்லாதவர்” என்றெல்லாம் முன்னோர்களில் சிலர் அவர்களைச் சந்தேகித்திருக்கும் போது, நாமும் சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்காமல், ஹதீஸ்கள் என்று சொல்லப்படுபவைகளை நாமும் உறுதியாக நம்புகிறோம்.
நாம் எவரையும் பின்பற்றக் கூடாது என்று சொல்வது கருத்துக்கள் பற்றியதே! தகவல்கள் பற்றியது அல்ல.
“காந்தி சுடப்பட்டார்” என்ற செய்தியை நம்முடைய பெற்றோர் வாயிலாகக் கேட்டு நம்புவது தக்லீத் ஆகாது. தகவல்களை அப்படித்தான் நம்ப வேண்டும். அதே பெற்றோர், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதே தக்லீத் எனப்படும். அதுதான் கூடாது. அல்லாஹ் இந்த வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கிக் கொள்ள அருள்செய்வானாக!
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : http://www.readislam.net/

Thursday, November 12, 2009

தியாகத் திருநாள்
இப்னு ஹத்தாது
இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. "ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.
ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.
அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு "முஸ்லிம்" என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.
நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது 'ரப்'பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. "இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்." (அல்குர்ஆன் 3:95)
இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.
"என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?" என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். "மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!" என்று அதட்டுகிறார்.
நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், "மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை - வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்" என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, "நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்", என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.
"இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு" (அல்குர்ஆன் ் 19:46) என்றார்.
ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்ாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து - இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். "தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்" என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (அல்குர்ஆன் ் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (அல்குர்ஆன் 21:68,69)
நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.
ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). "எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?" என்ற பாச மனைவியின் கேள்விக்கு, "ஆம்!" என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள்.
நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் - அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே "ஜம் ஜம்" நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்" தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.
பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. "அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்" (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். "தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?" தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.
ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், "ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் - இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்." (அல்குர்ஆன் 37 :103-110)
இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)
தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.
"(நீர்) கூறும்!
எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே." (அல்குர்ஆன் 6: 162)
எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.
அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத் தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிது படுத்திக் காட்டப்படும் மாயாஜல வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக ஒரு பெரியார் இன்னொருவரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார். கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்ைடயிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்து விட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் காப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி வலியாக இருக்க முடியும்? ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி ‘கராமத்’ காட்ட முடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருத்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள்.
நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது". (அல்குர்ஆன் ் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத் தான். (அல்குர்ஆன் ் 10:63, 49:13) இந்த மாயாஜலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. அல்குர்ஆன் ், ஹதீதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும்.
நபி இப்றாஹிம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகி விடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்து விட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.
கீழ்க் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் ் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள்.
"ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹிம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்." (அல்குர்ஆன் ் 37 : 103 - 107)
சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹிம்(அலை) மகனை குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
உண்மைக்குப் புறம்பான, மாயாஜல மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்க தோசத்தில் அல்குர்ஆன் ் தெளிவாக பறை சாற்றிக் சென்றிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் ைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜல மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பாாகள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான், செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.
இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பாாக்கும் போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டி விட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு "இமேஜை" உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷிக்காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெயய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக!
"மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)
அல்குர்ஆன் ் ஹதீதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அல்குர்ஆன் ் ஹதீதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த "ஈத்" இலட்சியமாக் கொள்வோமாக
!
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : http://www.readislam.net/

Wednesday, November 11, 2009

அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி
மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)
ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)
இறைவன் தன் அடியார்கள் எப்படித் தன்னை வணங்கி வழிபட வேண்டும் என்று கோருகிறான் என்பதைப் குர்ஆன் விரிவாக விளக்குகிறது. தொழுகை, வணக்க வழிபாடு, கடமையாக்கப்பட்ட ஈகை, போன்றவற்றைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு குர்ஆன் பதில் அளிக்கிறது. இறை நம்பிக்கையாளருக்கு உரிய பண்பாடுகள் பற்றி மட்டும் கூறுவதோடல்லாமல், இறை நம்பிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டியவை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், ஆகிய யாவும் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றன. தன்னடக்கம், தியாக மனப்பான்மை, நேர்மை, நீதி, இரக்கம், சகிப்புத்தன்மை, உறுதி மற்றும் இவை போன்ற ஒழுக்கச் சிறப்பியல்புகள் இறைவனின் நல்லடியாளர்களிடம் அமைய வேண்டிய பண்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இறை நம்பிக்கையாளர்கள் இவற்றைக் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் இறைவன் ‘ஒன்றுமில்லாமை’ யிலிருந்து படைத்தான். உயிரினங்களில் மனிதன் குறிப்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறான். அவற்றுள் மிக முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது ‘ஆன்மா’ ஆகும். இதுதான் மனிதனை உணர்வுடையனாக்குகிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானவை எனில் அவற்றை மனிதன் எண்ண ஆரம்பித்தால் அவனால் எண்ணி முடிக்க முடியாது, என்று இறைவன் அறிவிக்கின்றான். (அந்நஹல்:18). எனவே மனிதன் இந்தச் சலுகைகள் எல்லாம் தனக்கு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் பிரதிபலனாக இறைவன் மனிதனிடம் கோருவது என்னவென்பதையும் ஆலோசித்து அறிய முற்பட வேண்டும்.
அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயனளிப்பவற்றை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வறண்டு காய்ந்த பூமியை செழிப்படையச் செய்ய வானத்திலிருந்து இறைவன் பொழியச் செய்யும் மழையிலும், எல்லாவிதமான படைப்பினங்களையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்று வீசும் பல திசைகளிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் (நல்ல நோக்கங்கள் நிறைவேற உதவும்படி) நிலைபெற்றிருக்கச் செயதிருக்கச் செய்திருக்கும் கருமேகத்திலும் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக சான்றுகள் இருக்கின்றன. (2:164)
தான் நுகரும் எல்லாச் சலுகைகளும் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதை உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன் மனிதன். எனவே தான் இறைவனுக்கு நன்றியுள்ளவனாக விளங்கவேண்டும் என்பதை உணர்ந்தவனாக மனிதன் விளங்குகின்றான். ஆனாலும் அந்த நன்றியுணர்வு எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியமாட்டான். இதிலும் மனிதனுக்கு வழிகாட்டுகிறது குர்ஆன்.
குர்ஆனில் இறைவன், மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காரியத்திற்கும் தன் அனுமதியைப் பெற வேண்டுமென்று கோருகிறான். மனிதனுடைய வாழ்வில் ஒவ்வொரு கணமும் இறைவனுடைய விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமேயல்லாது தன்னுடைய விருப்பத்திற்கும் இச்சைக்கும் ஏற்ப செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் தன் இச்சைக்கு அடிமையாகி விடுவான். ( 25:43)
தன் இச்சையை தன்னுடைய இறைவனாக எடுத்துக்கொண்டிருப்பவனை பார்த்தீருக்கிறீரா?
இறைவனின் இந்த எச்சரிக்கைக்குச் செவி சாய்த்து, இறை நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை நிறைவேற்ற பலவழிகள் தோன்றும்போது, இறைவனின் திருப்தியைப் பெற்று தரும் வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பான்; அஃதொரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கருத்தாகவோ மனப்பான்மையாகவோ இருந்தாலும் சரி.
இதன் விளைவாக, தன் இறைவனின் திருப்தியைப் பெறும் வகையில் தன் வாழ்நாளில் எல்லா நடவடிக்கைககளையும் மேற்கொள்ளும் இறைநம்பிக்கையாளன் என்றும் அழியாத பேறுகளை அடைய அருகதை உடையவனாகிறான். எனவே,மனிதன் இறைவனின் அடிமையாக இருப்பதன் மூலம் தனக்கே பலன் தேடிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன். (29:6)
மனிதனுடைய வணக்க வழிபாடுகளும் நல்ல நடவடிக்கைகளும் எல்லாம் இறைவனுக்குத் தேவையே இல்லை. குர்ஆன் இதனை, அல்லாஹ் என்றுமே தேவைப்படாத வளமிக்கவன்.
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : http://www.readislam.net/

Tuesday, November 10, 2009

கருணை
இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.'' மேலும் கூறினார்கள்: "மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.'' (முஃஜமுத் தப்ரானி)
முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.
அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். "குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே' என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) "எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் "எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல "குழந்தைகளை முத்தமிடமாட்டேன்' என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: "உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்." அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி
ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் முறை கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் "எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது' என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் "விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?'' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் "உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு'' என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)
இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.
முன்மாதிரி முஸ்லிம்
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நன்றி : http://www.readislam.net/

Monday, November 9, 2009

இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)

S.அஸ்லம். இலங்கை
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)
வஸீலா என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற அர்த்தத்தை கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான். 1, இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுதல். 2, நம்முடுடைய ஸாலிஹான நல்ல அமல்களைக்கொண்டு வஸீலா தேடுதல் 3, ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக துஆ செய்யச் சொல்லி வஸீலா தேடுதல்
.مَا كَانُواْ يَعْمَلُو وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ نَ அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180) மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திருநாமங்களைக் கூறி பிறார்த்தித்து "வஸீலா" தேடுவதற்கு அனுமதி இருப்பதை காணலாம்.وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ நீங்கள் பொருமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2:45) பனூ இஸ்ரவெல் காலத்தில் நடந்ந குகையில் அடைப்பட்ட மூன்று நபர்களின் சம்பவம் ஸாலிஹான நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்கட்டாகும்.
கடுமையான மழையின் காரணமாக மூவர் ஒரு குகையினுள் ஒதுங்கிய போது, கடுங்காற்று அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்) மெற்கண்ட சம்பவத்தின் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதை அறிகிறோம்.
ஒரு நல்ல அடியார் உயிருடன் இருக்கும் பொழுது நம்முடைய தேவைகளுக்காக துஆ செய்யச் சொல்லி وَسِيلَةَ "வஸீலா" தேடுவதற்கு உமர்(ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுதுக்காட்டாகும். உமர்(ரழி) காலத்தில் மழை இல்லாமல் கடுமையியான பஞ்ஞம் ஏற்பட்டது. அப்பொழுது உமர்(ரழி) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் நல்லடியாராகக் கருதப்பட்ட நபி (ஸல்) கொண்டு மழைக்காக பிரார்தனை செய்யச்சொல்லி, மழை வந்து செழிப்புற்று பஞ்சம் நீங்கியது. (புஹாரி)
வஸீலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு விஷயத்தில் தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கதிற்க்கு முரணாக இறந்த நமது முன்னோர்களின் பொருட்டால் கேட்டு பலர் வழி தவறிக்கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து துஆ செய்யச் சொல்லலாம். நமது தேவையைக் கேட்டுப் பெறலாம். ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கத்தில் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால் பதில் அளிக்கமாட்டார்; இந்நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து அடக்கமாகி விட்டவர்களிடம் போய் கேட்டால் பதில் கிடைகுமா? கபுருகளுக்கு சென்று முறையிடும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா? وَمَا يَسْتَوِى الاٌّحْيَآءُ وَلاَ الاٌّمْوَاتُ உயிருள்ளோரும், மரணித்தோரும் சமமாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 35:22) என்ற தெளிவான இவ்வசனத்தையும் கவனிக்க வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம் முறையிடுவதை வல்ல அல்லாஹ் வண்மையாக கண்டிப்பதைப் பாருங்கள்.
أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا "இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். (அல் குர்ஆன் 18:102) மேலும் இறைவன் இவர்களைப் பற்றி கூறுகிறான்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்து தரட்டுமா (நபியே!) நீர் கேளூம் (அல்குர்ஆன் 18:103)
الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே நாங்கள் மிக நல்ல காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்வார்கள் .(அல்குர்ஆன் 18:104) இவ்வுளவு தெளிவாக உள்ள இவ்விஷயத்தை உலக ஆதாயம் தேட முனையும் சிலர் பின் வரும் வசனத்தை காட்டி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உண்ர்ந்து கொள்ளமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154) இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில் இறந்த நல்லடியார்கள் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார்கள் என்று இறைவன் கூறுகிறான். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம், சிபாரிசு செய்யச் சொல்லாம் என வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் எப்படி உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள் என்று இறைவன் தெளிவாகக் கூறுவதை இவர்கள் உணரவில்லை. மேலும் இவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவி கொண்டுயிருப்பார்கள்: அங்குள்ள கனிகளைப்புசித்து மகிழ்வார்கள். (நூல்: அபூதாவூத்)
எனவே நல்லடியார்கள் சுவர்கத்தில் உயிருடன் இருக்கிறார்கள், கபுருகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவனை நெருங்குவதற்குரிய வழியைத்தேட முற்பட்டு இம்மையிலும், மருமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர் வழியில் நடத்தாட்டுவானாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : www.readislam.net

Saturday, November 7, 2009

சகோதரத்துவம் பேணுவோம்

தாருல் ஹுதா, சென்னை

புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் உத்தம நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள், நல்லோர்கள் மீதும் உண்டாகட்டும். இப்பிரசுரத்தில் நடுநிலையோடு சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். சமுதாய மக்களே! இன்று நாம் நமக்குள் பல பிரிவுகளை நாம் வகுத்துக் கொண்டோம். இருப்பினும் நாம் ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வேதம், ஒரே கிப்லா என்ற ஒற்றுமையில் உறுதியாக இருக்கிறோம். விசுவாசிகள் அனைவரும் சகோதரர்கள். என்று சூளுரைக்கிறோம். பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானது உலக முஸ்லிம்களுக்கு பொதுவானது என்று சட்டம் கூறுகிறோம்.
உலகிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இறையில்லமான கஃபத்துல்லாஹ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். அதை கருப்பர், வெள்ளையர், அரபி, அஜமி என்று பலரும் ஹஜ் செய்கிறார்கள். அங்கு தொழுகிறார்கள். அது கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது. இன்றும் அங்கு மத்ஹபுகளைச் சார்ந்தவர்களும், சாராதவர்களூம் வந்து செல்கின்றனர். அல்லாஹ்வை மட்டும் வணங்க வருபவர்களுக்கு இன்றுவரை அது பொதுவாகவே உள்ளது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். பள்ளிவாசல்களை பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 2:114
நாம் சற்று நிதானமாக சிந்திப்போம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்து இஸ்லாமை மார்க்கமாக ஏற்றுக்கொண்டவர்களையே முஸ்லிம் என்று சொல்கிறோம். இதையே குர்ஆன், நபிமொழியும் உறுதி செய்கிறது. ஆனால் இன்று நாம் நடைமுறையில் (தமிழகத்தில்) நான்கு மத்ஹபுகளை சாராதவர்கள் பள்ளிக்குள் நுழையக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளோம். இப்போது சில கேள்விகள் எழுகின்றன.
1.மத்ஹபுகளைச் சாராதவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று மத்ஹபுகளைச் எந்த ஆலிமாவது தீர்ப்பு வளங்கியுள்ளாரா?
2.மத்ஹபுகளைச் சாராதவர்களும் முஸ்லிம்கள்தான் என்றால் அவர்களை அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து தடுக்க நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
3.மத்ஹபுகளை நாம் மார்க்கத்தில் ஜாதிகளாக எடுத்துக்கொண்டோமா? இணை வைப்பர்வர்கள்தாம் தங்களை பல ஜாதிகளாக பிரித்துக்கொண்டு ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினரின் கோயிலுக்கு செல்லாததையும், சென்றால் தடுக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
நாளை மத்ஹபுகளைச் சாராத முஸ்லிம்களுக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் உதவி செய்ய முன்வரமாட்டோமா? அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதியுண்டா? அல்லது நமக்கு ஒரு பிரச்சனை என்று அவர்கள் உதவிக்கு வந்தால் 'நீங்கள் மத்ஹபை பின்பற்றவில்லை' என்று கூறி நாம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவோமா?
இன்று கஃபத்துல்லாஹ்வை முஸ்லிம்களில் ஒரு கொள்கையுடைய சாரார் நிர்வகித்து வருவதால் அந்த கொள்கையைச் சாராதவர் அங்கு வரக்கூடாது என்றால் நாம் அதை ஏற்றுக்கொள்வோமா? உண்மையில் மத்ஹபுகளைச் சாராதவர்கள் வழிகேட்டில் இருந்தால், நேர்வழியில் இருக்கும் நாம் அவர்களை பள்ளிக்குள் அனுமதித்தால்தானே நமது பண்பு குணங்கள் ஒற்றுமையைப் பார்த்து நமக்கு ஆதாரங்களையும் நல்லுபதேசங்களையும் கேட்டு அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். பள்ளிக்குள் ஏகத்துவ கொள்கைக்கு முரண்பட்டு வணக்க வழிபாடுகள் செய்வதற்குத்தான் அனுமதியில்லை. அதைத்தவிர அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளிகள் உள்ளன.
நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18
நாம் அவர்களை தடுப்பதால் நேர்வழி பெருவதிலிருந்து தடுத்தவர்களாவோம். கருத்து வேற்றுமை யாரிடம்தான் இல்லை. நான்கு மத்ஹபுகள் ஒற்றுமையானதா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் இமாமுக்குபின் தொழுபவர், நிலையில் குர்ஆன் ஓதினால் அது ஹராமுக்கு நெருக்கமான குற்றம் என்றும், இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ஓதுவது கட்டாயக்கடமை என்றும் கூறுகின்றனர். இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் கையை தூக்கவேண்டும். பிஸ்மில்லாஹ், ஆமீன் சப்தமிட்டு சொல்லவேண்டும் என்று சொல்ல, அதை இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் மறுக்கிறார்கள். இன்னும் ஃபர்ளு வாஜிபுகளிலேயே பல கருத்து வேற்றுமைகள் உள்ளன. அவ்வாறிருக்க இதைவிட முக்கியத்துவமற்ற விஷயங்களுக்காக நாம் பிறரை எப்படித்தடுக்க முடியும்?
தொப்பி அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும், அல்லது தொழவேண்டும் என்று சட்டமிடுவதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளோம். அப்படி நாம் பின்பற்றும் மத்ஹபுகளில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? பள்ளியின் ஒழுக்கங்கள் அல்லது தொழுகையின் ஒழுக்கங்களில் ஒன்று தொப்பி அணிவது என மத்ஹபுகளின் எந்த ஆதாரப்பூர்வமான, தீர்ப்பளிக்க தகுந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது? அப்படி எங்கும் கூறப்படவில்லையே! அப்படி இருக்க நாம் அதை சட்டமாகவும், கட்டாயமாகவும் ஆக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
நபி(ஸல்) தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதற்கு சில ஆதாரங்களைச் சொல்பவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த ஆதாரங்களை பார்க்கும்போது தொப்பியைவிட தலைப்பாகை அணிவதைத்தான் கட்டாயமாக்க வேண்டும். ஆனால் தொப்பி அணியக்கூறும் எவரும் தலைப்பாகைக்கு ஏன் முக்கியத்துவம் அளிப்பதில்லை? தொப்பி அணிய வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் எங்கும் கூறவில்லை. ஆனால் தாடி நீளமாக வைக்கவேண்டும் என்று பல இடங்களில் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். எனவே தாடி வைக்காதவர்களையும் அல்லது தாடியை குறைப்பவர்களையும் பள்ளிக்குள் வரக்கூடாது என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா? இக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலிம்கள் தாடியை குறைப்பவர்களாகவும், பள்ளி நிர்வாகிகள் தாடியை சிரைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களை கண்டித்து புத்தகம் எழுதவோ, பள்ளிவாயிகளில் போர்டு போடவோ தைரியம் இருக்கிறதா?
மத்ஹபுகளை சார்ந்து ஒரு காரியத்தை செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று நாம் வாதிட்டால் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் சட்டப்படி விரலை ஆட்டவேண்டும். அதை ஏற்றுக்கொள்வோமா? இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் சட்டப்படி உடலில் கட்டாயமாக மறைக்க வேண்டியது முன்பின் இரு பகுதிகள் மட்டுமே. தொடை அவ்ரத் அல்ல. அப்படி மாலிக்(ரஹ்) அவர்களின் மத்ஹபைச் சேர்ந்தவர் வந்து தொழுதால் அனுமதிப்போமா? இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் சட்டப்படி காலணி சுத்தமாக இருக்கும்போது அணிந்துதான் தொழவேண்டும். இதை நாம் பள்ளிவாசல்களில் அங்கீகரிப்போமா?
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். அல்குர்ஆன் 3:103
ஆகவே ஒரே மார்க்கத்தில் இனைந்துவிட்ட நாம் ஏன் சில கருத்து வேற்றுமைக்காக மீண்டும் எதிரிகளாக்கிக் கொள்ளவேண்டும். இமாம்களை ஒரு கூட்டம் குறை கூறினால் அதன் தண்டனையை அவர்கள் மறுமையில் அனுபவித்துக் கொள்ளட்டும்.
நபி(ஸல்) அவர்களே தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏசி துன்புறுத்திய முனாபிக்குகளைக் கூட பள்ளிக்குள் வரக்கூடாதென்று தடுத்ததில்லை. வஞ்சித்ததும் இல்லை. கஃபத்துல்லாஹ்வைவிட மதினாவின் பள்ளியைவிட நமது பள்ளிகள் உயர்வானதல்ல. எனவே நபி(ஸல்) அவர்களை நாம் பின்பற்றுவது உண்மையென்றால் கலிமா சொன்ன எவரையும் தடுப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கலிமா சொன்ன நமக்கு பள்ளிவாசலில் என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கலிமா சொன்ன அனைவருக்கும் இருக்கிறது என்று எல்லோருக்கும் விளங்கவேண்டும். நபி(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளாத ஷியா, போராக்கள் கூட இன்று கஃபத்துல்லாஹ் மற்றும் மஸ்ஜிது நபவிக்கு வருவதையும் அவர்கள் தடுக்கப்படாததையும் நாம் பார்க்கிறோம். இறுதியில் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை நாம் நினைவில் நிறுத்துவோம்.
நீங்கள் உங்களுக்குள் துண்டித்து வாழாதீர்கள்; புறக்கணித்து வாழாதீர்கள்: கோபம், வெறுப்பு கொள்ளாதீர்கள்: பொறாமைப்படாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி சகோதரர்களாக ஆகிவிடுங்கள். நூல்: முஸ்லிம்
ஆழ்ந்து சிந்தித்து இதுபோன்ற பிரிவினைகளையும் பினக்குகளையும் ஏற்படுத்தும் அறிவிப்புகளை பள்ளிவாசல்களிலிருந்து அகற்றுமாறு சங்கைமிகு இமாம்களையும், மதிப்புமிகு ஜமாஅத்தார்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது விஷயத்தில் உலமா சமுதாயம் மக்களுக்கு நடுநிலையுடன் சத்தியத்தை எடுத்துரைக்கக் கோருகிறோம்.
நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் 8:46
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
நன்றி : www.readislam.net

Monday, November 2, 2009

இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கம் ஒளிவிளக்கு!
சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான்
இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:
நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் 'ஆதமின் மக்களே!' என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.
அவன் எல்லா உலகங்களின் இறைவன் (திருகுர்ஆன் 1:1)நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் மனித குலம் அனைத்திற்கான இறைத்தூதர் ஆவார்.ஓ மக்களே! நான் உங்கள் எல்லோருக்குமான இறைத்தூதன்: (திருக்குர்ஆன் 8:158)சகல நாடுகளுக்குமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் (திருகுர்ஆன் 25:1)எல்லா நாடுகளுக்கும் உம்மை இரக்கத்தின்படியே அனுப்பியிருக்கிறோம். (திருகுர்ஆன் 21:102)
இஸ்லாத்தைப் போல பிற எந்தச் சமயமும் உலக சகோதரத்துவத்தை வற்புறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு குறுகிய பிரிவினைச் சபை அல்ல. இது இஸ்லாத்தின் உள்ளொளியும், ஆற்றல் களமும் ஆகும், இஸ்லாம் மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒட்டுமொத்தமாக அறைகூவல் விடுக்கிறது. எல்லாப் படைப்புகளும் இறைவனைச் சார்ந்தவையே, அவனது படைப்புகளைச் சிறப்பாக நேசிக்கிறவனே, அவனால் அதிகமாக அன்பு செய்யப்படுகிறவன் ஆவான் என்கிறார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)
மேலும் அவரே குறிப்பிட்டதாவது: ~என் அருமை எஜமானே! என் உயிரின் மற்றும் எனது எல்லாவற்றிற்குமான கர்த்தாவே! உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று உறுதி கூறுகிறேன்.
கடவுளின் வழிகளைக் கனம் பண்ணுங்கள், கடவுளுக்குச் சொந்தமான உலகப் படைப்பினிடம் அன்பு பாராட்டுங்கள். ஆகவே செயற்கைப் பிரிவுகளால் உருவாகிற வேறுபாடுகள், தடைகள் ஆகியவற்றை இஸ்லாம் ஏற்பது இல்லை.
இஸ்லாம் அரேபியர்களுக்காக இறக்கப் பட்டதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனால் உலகத்திற்காக, அனைத்து மக்களுக்குமாக அது இறக்கப்பட்டது என்பதை ஏற்காமலிருந்தால் அது மனித குலத்திற்கு தான் மாபெரும் இழப்பாகிப் போகும்.
இஸ்லாம், சர்வதேச வாழ்க்கை முறையை எவ்வாறு அங்கீகரிக்கிறது, என்று பார்ப்பது நலம். ஒரு இஸ்லாமிய குடியரசிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் மற்ற நாடுகளுக்குமான உறவு முறைகளை இது குறித்துக் காட்டுகிறது. இம்மாதிரியான உறவுமுறைகளும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திடல் வேண்டும். இதற்கான அடிப்படைகளை இப்போது பார்க்கலாம்.
மனிதத் தொடக்கம், மனிதனின் நிலை, அவனது சமுதாய நோக்கம். ஆகியவற்றில் உள்ள ஒரே மனித சமுதாய உணர்வின் மீது அசைவற்ற நம்பிக்கை வைத்திருப்பது (திருகுர்ஆன் 4:1, 7:189, 49:13)
மற்றவர்களாக ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வரை அவர்களது உயிர், உடமை, உரிமைகளுக்கு பாதுகாப்புத் தருவதில் உறுதியாக நிற்பது. (திருகுர்ஆன் 2:190-193,42:42)
நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ணத் தின் அடிப்படையில் சமாதானத்தை உறவு முறைகளில் கடைபிடித்தல். (திருகுர்ஆன் 8:61)
இஸ்லாமிய அரசாங்கத்தின் இறையாண்மைக்குச் சவால் விடுத்து, அதன் உரிமைகளைக் காலில் இட்டு மற்ற நாடுகள் மிதிக்கிறபோது, வேறு வழிகள் பயன் தராவிட்டால் தற்காப்பிற்காகப் போரிடலாம். (திருகுர்ஆன்; 2:190-195,216,218, 22:39-41)
மற்ற நாடுகள் பிரமாணிக்கமாக இருக்கிறவரை அந்த நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மதித்தல்-நிறைவேற்றுதல். (திருகுர்ஆன் 5:1, 8:55-56,58, 9:3-4)
உள்நாட்டில் அமைதியைக் கட்டிக் காத்து, மக்கள் நலத்தை மேம்படுத்துவது மாத்திரம் போதாது: ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், மனித குலத்தின் ஒட்டுமொத்தமான, பொதுவான முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும். இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே வற்புறுத்தி வந்தார்கள். ஆகவே, உலக நலத்திற்காகச் சில சமயங்கள் பிரார்த்திப்பதோடு நின்று விடுகிற நாட்களில், மனித குல ஈடேற்றத்திற்காக முன்நிற்பதை, உழைப்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தை நாடு கடந்து வந்த நதி என்று அழைக்கலானேன்.
இஸ்லாம்;; ஒரே உலகத்திற்கு நம்மை அழைக்கிற ஒளிவிளக்கு...உலகத்தின் பல்வேறு சின்னதும் பெரிதுமான பிரசங்கத் தொட்டிகளிலிருந்து ஒரே மாதிரி எடுத்துச் சொல்லப்படுகிற தத்துவார்த்தம் ஒன்று உண்டென்றால் அது ஒரே உலகம் தான்.
உலகம் ஒன்றாக இல்லை என்பதற்குக் காரணம், உலகத்தின் அடிப்படை அழகான மனிதனும் ஒன்றானவன் இல்லை என்பதுதான். அடையாளம் காண்பதற்காகவே மனிதன் வெவ்வேறாகப் படைக்கப்பட்டான். இப்படித்தான் திருகுர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் உலகம், மதம், மொழி, இனம், நாடு என்கிற அடித்தளத்தில் பிரிந்தும், பிளந்தும் கிடக்கிறது.
ஒருவரிடமிருந்து, மற்றொருவர் எதற்காக வேறுமாதிரி படைக்கப்பட்டாரோ அந்த அடிப்படை அவசியத்தையே மனிதகுலம் தாறு மாறாக்கி விட்டது. தாமஸ் மூரிலிருந்து, ஹெச்.ஜி. வெல்ஸ் வரை-அவருக்குப் பிற்பாடும் ஒரே உலகம் கனவுலக சஞ்சாரமாகவே அமைந்துள்ளது.இப்போது பல்வேறு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளின் இரவு உணவுக்குப் பின்னரான மயக்கம் கலந்த பேச்சுகளில் மாத்திரமே இந்த ஒரே உலகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவை வழிநடத்தும், புதிய ஒரே உலகத்திற்கான அறைகூவலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாம் ஒன்றுதான் அந்த ஒரே உலகத்திற்கான வழி என்பதாகத் தோன்றுகிறது. உலகின் ஒருமை என்பது சில சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து விடுவது அன்று. சில நாடுகள் ஒரு தலைப்படுவதும் அன்று. இவ்வாறான ஏற்பாடு செய்யப்படுகிற அமைதி, கடந்த காலத்தில் உலக அமைதிக்கே குந்தகம் உண்டாக்கியிருக்கிறது. வரலாற்றில் இதற்கு நிரம்ப உதாரணங்கள் உண்டு. ஒருவர் மற்றொருவரைத் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொன்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றாகி விடுகிறது.
ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கொல்லுகிறபோது, அதன் ஆத்மாவை நெறித்து அழிக்கிறபோது, வெற்றி பெறுகிறவர்களும், தோற்றுப்போகிறவர்களும் தங்களுக்காகப் போரிட்டவர்கள், படுகொலைகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி மகிழுகிறார்கள்.ஆகவேதான் சில வேளைகளில் ஒரு நாடு கரை கடந்த தேசப்பற்றால் எரிகிறபோது அது ஒரே உலகம் என்கிற தத்துவத்தற்கு எதிராக போகிறது.
தேசப்பற்று அவசியமே. அது அடுத்த நாட்டை வெறுப்பதாக இருத்தல் ஆகாது. நாடு, நாமே ஏற்றுக்கொண்ட ஏற்பாடுதானே! இதில் அடுத்த நாட்டை வெறுப்பதற்கு எங்கே இடமிருக்கிறது?
இவ்வளவு முயன்றும் ஒரு நாட்டை ஏன் நம்மால் ஒற்றுமைப்படுத்த முடியவில்லை? எந்த அடிப்படைகளில் நாட்டு மக்களை ஒன்று சேர்க்க முயலுகிறோமோ, அந்த அடிப்படைகளே தவறானவையாக இருக்கின்றன. இன அடிப்படையில் தனது மக்களை ஒன்று சேர்க்க ஒருவர் முயலுகின்றார். சமயப் பிரிவினைகள் தலைதூக்குகிறபோது, இன ஒற்றுமை எடுபடாமல் போகிறது.
மற்றொருவர் சமய அடிப்படையில் தமது மக்களை ஒன்று திரட்ட முனைகின்றார். இனப் பிரிவுகள் தலைகாட்டி இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. தேசீயம் என்கிற அடிப்படையில் வேறொருவர் மக்களை ஒன்று திரட்ட முற்படுகிறார். ஆனால், பல்வேறு மொழிகள், மொழி உணர்வுகள், அதனதன் வரலாறுகள், செழுமைகள், பாரம்பரியங்கள் தேசீய அடிப்படையில் சேர இயலாமல் இந்த முயற்சியை அழித்து விடுகின்றன. காரணம் மொழிதான் மனிதனின் கடைசியான மானச் சின்னம். அந்த மொழியை அவமானப் படுத்திவிட்டு, நாட்டொருமை பேசுவது வீண்வேலை.
ஒருவர் மொழி அடிப்படையில் அம்மொழி பேசுவோரை ஒன்றிணைக்க முயலுகின்றார். அதிலும் அவர் தோல்வியே பெறுகின்றார். காரணம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணம் படைத்தோர் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டி விடுகின்றன. நீங்கள் ஒன்றாக்க நினைக்கிற மனிதத் தொகுதி மண்புழுவைப் போல பிரிந்து கொண்டே போகிறது! ஏன்?
மனிதர்களைப் பிரிக்கிற, பேதப்படுத்துகிற அடிப்படை அலகுகளை வைத்துக் கொண்டு அவர்களை ஒன்று சேர்க்கிற மடத்தனத்தில் இவர்கள் இறங்குகிறார்கள், இம்மாதிரியான தவறான முயற்சிகளுக்கும் வரலாற்றில் வெற்றி வந்ததுண்டு. ஆனால் அந்த வெற்றி நீடித்ததாகவோ, நிலைத்ததாகவோ இருந்ததில்லை.
முதலாவதாக நம்மில் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தில் ஒரு மகத்தான மகரந்தம் மாத்திரமே என்பதை உணர வேண்டும். வானத்தை, அதில் இயங்கும் பல்வேறு கோளங்களை, தாளகதி தப்பாமல் இயங்கும் உடுக்களை, இரு சுடர்களை எண்ணிப் பார்த்தால் இயற்கையில் ஒரு ஒழுங்கு இருப்பது புலப்படும்.
காஸ்மாஸ் (cosmos) என்கிற வார்த்தைக்கே ஒழுங்கு என்பதுதான் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களும் ஏவல் செய்கிற பேராண்மை நம்மை வியக்க வைக்கிறது. இவற்றையெல்லாம் இயக்குவோன் யார்? எந்தப் பெயராலும் அவனை அழைத்துக் கொள்ளுங்கள்.அவன் இறைவன் அல்லவா? அந்த இறைவன் நாட்டுக்கொரு கதிரவனைப் படைத்தானா? நதிகள் ஏன் நாடுகளைக் கடந்து, ஊடறுத்துப் பாய்கின்றன.?
மழைத்துளிகளில் இது இந்த நாட்டைச் சார்ந்தது- அது அந்த நாட்டைச் சார்ந்தது என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? ஒருவர், சுவாசித்துவிட்ட காற்றையல்லவா நாம் சுவாசிக்கிறோம்: நமது காற்றை வேறொருவர் சுவாசிக்கிறார்.
காற்றுக்கு மொழி உண்டா?இனம் உண்டா?சாதி உண்டா?நாடு உண்டா?நேற்று, இன்று, நாளை என்கிற காலப் பிரிவினை உண்டா?
நாம் சுவாசிக்கிற காற்றில் இது இந்தியக் காற்று - இது பாகிஸ்தான் காற்று என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் பிரிவினைகள்? பேதங்கள்? இறைவன் ஒரே உலகத்தைத்தானே படைத்தான். இதில் ஏன் இத்தனை பிளவுகள்? மனிதனே இந்தச் செயற்கையான பிரிவினைகளுக்கெல்லாம் காரணம். இவ்வாறு பிரிவது, பிரிப்பது மனிதனின் மாற்றமுடியாத இயற்கை. அவன் தன்னைத் திருத்திக் கொள்ள இயலுமா? இயலும்: மனிதன் தனது ஆறாவது அறிவை முழுக்கப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்பு(அடிமை)கள் என்பதை அவன் அறிய இயலும். அவன் படைத்த ஒரே உலகத்தைச் செயற்கைச் சுவர்களால் மனிதன் பிரித்துப் பேதப்படுத்திப் பின்னப்படுத்தலாமா?
இறைவனின் வழிகாட்டுதலைப் பற்றியே இஸ்லாம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. இறைவனின் வழிகாட்டுதல் எங்கே இருக்கிறது? திருகுர்ஆனில் கண்கள் படைத்தோருக்கெல்லாம் காணக்கிடக்கிறது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே - முஸ்லிம்கள் பிரகடனப்படுத்துகிறார்கள்.
நமது புகழ் மொழிகள் எந்த அளவிற்கு மனிதர்களை நோக்கி மையம் கொண்டுள்ளன? வேறு வழி இல்லாமல், உடைந்து போன நட்சத் திரங்களையும், ஊளையிடுகிற நரிகளையும் மனிதன் புகழ்ந்து பேசித் திரிகிறான்.
இந்த அற்பமான மனிதர்கள் இந்தப் புகழுக்கு எள்ளவும் உகந்தவர்கள் அல்லர் என்பதனை அவன் அறியமாட்டானா...? நாம் நம்மைச் சோதித்தாக வேண்டும். இறைவன் ஒருவனே என்று இஸ்லாம் அறிவிக்கிற போது, இறை அடிமைகளான மனித குலத்தவர் அனைவரும் ஒருவரே என்றுதானே பொருள்?
இறைவனே நமது பேரரசன்; உலகத்தில் நம்மை ஆள வந்துள்ள மற்றோர் அவனது சின்னச் சின்ன பிரதிநிதிகள்; அதை அவர்கள் மறந்தால் வல்ல இறைவனே அவர்களுக்கு அதை நினைவு படுத்துவான்.
மதீனாவில் நபிநாதர்(ஸல்) அவர்கள் உருவாக்கிய முதல் சமுதாயத்தை உற்று நோக்குங்கள். போரிடுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்த, குழுக்களாகப் பிரிந்து கிடந்த அரேபியர்களை ஒரு குடையின் கீழ் தம் வாழ்நாளிலே அவர் கொண்டு வந்தது வரலாற்று அதிசயம் அல்லவா? இறை அச்சத்தில் மக்களை ஒன்றி ணைத்து ஒழுக்கக் கேடுகளிலிருந்தும், தப்பறைகளிலிருந்தும், நபிநாதர்(ஸல்) அவர்களை விடுதலை செய்யவில்லையா?
அந்த மக்களை நபிநாதர்(ஸல்) ஒன்று சேர்த்தது-மொழியை வைத்தா?நாட்டை வைத்தா?இனத்தை வைத்தா?எதை வைத்து...?இறைவனை வைத்து
அவனது திருவெளிப்பாடான திருகுர்ஆன் என்ற நெறிநூலை வைத்து.அப்படி என்றால் இறை நெறிநூலின் அடிப்படையில் மாத்திரமே. அவனது வெளிப்பாட்டின் வண்ணம் மாத்திரமே இந்த ஒரே உலகம் சாத்தியமாகும் என்பதற்கான வல்ல அறிகுறிகள் உள்ளன அல்லவா?
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.
அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக் கொள்ளுகிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பு உள்ளவனாக இருக்கிறான். (திருகுர்ஆன் 4:1)
என்று இறைவனின் நெறிநூல் உரைக்கின்றது. ஒரே உலகத்திற்கான இஸ்லாம் காட்டும் அடிப்படைகள் எவை என்று பார்த்தால்.
1. இறை அச்சம்2. ஒரே மனிதனிலிருந்து உண்டான உலக சமுதாயம்3. ஆண் பெண் சமத்துவம்4. தனிப்பட்டோர், சமுதாய உரிமைகள், கடமைகள்5. கடவுளின் நித்தியக் கண்காணிப்பு
ஒரே உலகத்திற்கான, தள்ள முடியாத, தவிர்க்க முடியாத அடிப்படைகள் இவை. இறைவனின் மீதான இஸ்லாமிய நம்பிக்கை உலக சமுதாயத்தை ஒரு சேரக் கட்டுகிற இணைப்புச் சங்கிலி; இஸ்லாமியத் தொழுகை மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை நிறுவுகிறது.
இஸ்லாத்தின் ரம்சான் மாத நோன்பு முஸ்லிம்களிடத்திலாவது உலக அளவில் ஒருமை காணுகின்றது. முஸ்லிம்களின் ஜகாத் வறிய சகோதர சகோதரிகளுக்கு வலியச் சென்று உதவ முன்வருகிற வழி. ஆதலால் இந்த உலகம் எல்லோருக்கும் உரியது என்றாகிறது.
இஸ்லாத்தின் ஹஜ் புனித யாத்திரை மனிதனுக்கு மனிதன் உள்ள வேறுபாடுகளை முஸ்லிம்கள் மத்தியிலாவது மறக்கடிக்கப் பண்ணுகிறது.பாழ்பட்டுக் கிடக்கிற உலகத்தை மீட்டு ஒரே உலகமாக இறைவனின் பூந்தோட்டமாக ஆக்குகிற பொறுப்பை இஸ்லாம் மேற்கொண்டுள்ளது.இல்லாவிட்டால் தனது சமுதாயக் கடமை களைச் சரிவர ஆற்றாத முஸ்லிம், இறைவனை உண்மையாகவே தொழ இயலாது என்கிற அளவிற்கு இஸ்லாம் சொல்லியிருக்காது.
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிரிருந்தே படைத்தோம், நீங்கள் ஒருவரை - ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்க ளைக் கிளைகளாகவும், கோத்திரங்களாக வும் ஆக்கினோம், (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தி(தக்வா) உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ் விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருகுர்ஆன் 49:13)
என்கிற திருகுர்ஆனின் வரிகள் ஒரு நாட்டினருக்கோ, மொழியினருக்கோ, இனத்தவருக்கோ உரியது என்று எவரேனும் குறிப்பிட இயலுமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பொறுத்தமட்டில் மனிதர்களில் இரண்டே பிரிவினர்தாம்.
1. இறைவனுக்கு அச்சப்படுவோர்2. இறைவனுக்கு அஞ்சாதோர்
நபிகள் நாயகம்(ஸல்) மதீனாவில் உருவாக்கிய முதல் சமுதாயத்திலேயே ஆப்ரிக்கர்களும், பாரசீகர்களும் சகோதரர்களானார்கள். மனம் மாறி முஸ்லிமான பிலால் என்ற ஆப்ரிக்கர் உமர் குறைஷியாலேயே தலைவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
நேர்வழி நடவாத ஒரு அரேபியனை விட நேர்வழி நடக்கிற ஒரு ஆப்ரிக்கன் ஆளத் தகுதி பெற்றவன் என்று நபிகள் நாயகம்(ஸல்) அடிக்கடி எடுத்துக் காட்டுகிறார்கள். வேகமாக மாறிவருகிற உலகத்தின் சுகக்கேடுகளுக்கு இஸ்லாம் ஒன்றுதான் மாமருந்து என்றெனக்குத் தோன்றுகிறது.
இஸ்லாமிய வாழ்க்கையைக் கவனத்தில் கொள்ளாமல், புறந்தள்ளிவிட்டு உலக சகோதரத்துவம் பேசுவதும், 'ஒரே உலகம்' அடைவதற்குப் பாடுபடுவதும் மன்னிக்கவே முடியாத குற்றங்களாகும்.
இறைவன் நமது உலகத் தலைவர்களின் உள்ளங்களில் பேசட்டும், அவர்களும் ஆர்வத்தோடு அவனது மொழிகளைக் கேட்கட்டும், அப்போது ஒரே உலகம் தனது தத்துவார்த்த மேடையிலிருந்து இறங்கி, நிதர்சனத்தை நோக்கி உருளத் தொடங்கும்.
நூல் : இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம், (வலம்புரிஜான்) பக்கம். 256-269)
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த


நன்றி : http://www.readislam.net/
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்